தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தீயணைப்பு நிலையத்தில் ஆணைய அலுவலகம் முன்னாள் டி.ஜி.பி.,க்கு தர்மசங்கடம்

தீயணைப்பு நிலையத்தில் ஆணைய அலுவலகம் முன்னாள் டி.ஜி.பி.,க்கு தர்மசங்கடம்

தீயணைப்பு நிலையத்தில் ஆணைய அலுவலகம் முன்னாள் டி.ஜி.பி.,க்கு தர்மசங்கடம்


ADDED : பிப் 26, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தில், தமிழ்நாடு தீயணைப்பு ஆணையத்திற்கு அறை ஒதுக்கப்பட்டு உள்ளதால், முன்னாள் டி.ஜி.பி., உள்ளிட்டோருக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு துறை பணிகளை நவீனமயமாக்கவும், பட்டாசு ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் தீ விபத்துகளை தடுப்பதற்கான வழிமுறைகளை வகுக்கவும், தமிழக அரசால், தீயணைப்பு ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆணையத்தின் முதல் தலைவராக, ஓய்வுப்பெற்ற டி.ஜி.பி., சங்கர் ஜிவால், 2025 செப்டம்பரில் நியமிக்கப்பட்டார். ஆணையத்தில், தீயணைப்பு துறை இயக்குநர், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் உட்பட ஆறு பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

தீயணைப்பு உரிமங்கள் வழங்குதல், பாதுகாப்பு சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும், தீயணைப்பு ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு ஆணையத்திற்கு, தேனாம்பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில், அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால், தீயணைப்பு ஆணைய தலைவராக உள்ள முன்னாள் டி.ஜி.பி., உள்ளிட்டோர், தர்ம சங்கடத்திற்கு ஆளாகி உள்ளனர்.

அலுவலகத்திற்கு வருவதை தவிர்த்துவிட்டு, சி.எம்.டி.ஏ., தலைமை அலுவலகத்தில் நடக்கும் கூட்டங்களில் மட்டுமே, ஆணைய தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்று வருகின்றனர்.



இதுகுறித்து, தீயணைப்பு துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது: எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை இயக்குநர் அலுவலகத்தில், தீயணைப்பு ஆணையம் செயல்படுவதாக இருந்தது. அங்கு இடநெருக்கடி காரணமாக, ஆணையத்திற்கு இடம் தரவில்லை.

சேப்பாக்கத்தில் உள்ள கலச மஹாலில், தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் மட்டுமின்றி பல்வேறு ஆணையங்களும் இயங்கி வருகின்றன. இங்கு அறை ஒதுக்கிருந்தால்கூட கவுரமாக இருந்திருக்கும்.

முன்னாள் டி.ஜி.பி.,யாக இருந்தவருக்கு, தீயணைப்பு நிலையத்தில் அறை ஒதுக்கியது சரியான நடைமுறை அல்ல. தகுந்த இடத்தை அரசு தேர்வு செய்து கொடுத்தால் மட்டுமே, ஆணையம் அமைத்ததற்கான நோக்கம் நிறைவேறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us