தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/பா.ஜ.,வின் அடுத்த இலக்கு தமிழகம்; 20 எம்.பி.,க்களை பெற வேண்டும்: அமித் ஷா சூளுரை

பா.ஜ.,வின் அடுத்த இலக்கு தமிழகம்; 20 எம்.பி.,க்களை பெற வேண்டும்: அமித் ஷா சூளுரை

பா.ஜ.,வின் அடுத்த இலக்கு தமிழகம்; 20 எம்.பி.,க்களை பெற வேண்டும்: அமித் ஷா சூளுரை

8


ADDED : ஜூன் 16, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 05:23 AM

8


8
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக பா.ஜ., மையக்குழு கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சமீபத்தில் டில்லியில் நடந்தது. அதன் பின், அவர் தமிழக பா.ஜ., முக்கிய நிர்வாகிகள் சிலரை தனியாக அழைத்து பேசியுள்ளார்.

அப்போது அமித் ஷா கூறியுள்ளதாவது: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ரவுடிகளை வைத்து அராஜக அரசியலில் ஈடுபட்டார். அவரது ஆட்சியை, மக்கள் துணையுடன் பா.ஜ., அகற்றி விட்டது. அடுத்த இலக்கு தமிழகம் தான். பிரதமர் மோடியை, தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

மாவட்டம் வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து, மாநில தலைமை ஆலோசனை கூட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டும். மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களை சந்திக்க வேண்டும். வரும் 2029 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும்.

விரைவில் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து தமிழகம் அனுப்பப்படுவர். அவர்கள் வாயிலாக, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, த.வெ.க., அரசின் தவறுகளையும் தொடர்ந்து தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us