ADDED : ஜூன் 10, 2026 05:43 AM

மதுரை: விரைவில் தனிக்கட்சி துவங்க உள்ள பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஐம்பது வயதுக்குட்பட்ட இளம் தொழில்முனைவோர், சமூகஆர்வலர்களை கட்சி நிர்வாகிகளாக நியமிக்க முடிவு செய்துள்ளார்.
இனி தனிக்கட்சி துவங்க வேண்டியதுதான் பாக்கி என்ற நிலையில் சில முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளார். அவருக்கு நடிகர் ரஜினியும் ஆதரவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. பல மாவட்டங்களில் ரஜினி ரசிகர்கள் அண்ணாமலை ஆதரவாளர்களுடன் இப்போதே கைகோர்த்துகளமிறங்கியுள்ளனர்.
அண்ணாமலை தற்போது ஒருவார பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் டில்லி சென்ற அண்ணாமலை அங்கிருந்து காரில் 'பாபா கேவ்ஸ்' என்ற பகுதிக்கு செல்கிறார். அங்கு தவம் மேற்கொள்ளும் சாதுக்களின் ஆசிகளை பெற்று தமிழகம் திரும்புகிறார். வழியில் ஜூன் 14ல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும் சென்றுவரும் வகையில் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இளம் நிர்வாகிகள் பட்டியல் அவரது ஆதரவாளர் மதுரை விஷ்ணுபிரசாத் கூறுகையில், அண்ணாமலை தமிழகம் திரும்பியதும், அரவக்குறிச்சியில் ஜூன் 19 முதல் 21 வரை ஆதரவாளர்களுக்கு அரசியல் நிர்வாகம் குறித்த பயிற்சி பட்டறைக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதன்பின் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை நியமித்து பட்டியல் வெளியிடுவார். இப்பட்டியலில் இடம் பெறுவோர் 50 வயதுக்குட்பட்ட இளம் தொழில் முனைவோர், சமூகஆர்வலர்கள், அரசியல் ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதால் அத்தகுதியுள்ளோரை தேர்வு செய்ய உள்ளார்'' என்றார்.
