மாநில தலைமையை விமர்சித்த பா.ஜ., நிர்வாகிகள் 9 பேர் நீக்கம்
மாநில தலைமையை விமர்சித்த பா.ஜ., நிர்வாகிகள் 9 பேர் நீக்கம்
ADDED : மே 10, 2026 01:38 AM

சென்னை: தமிழக பா.ஜ., தலைமையை விமர்சித்த முன்னாள் மாநில செய்தி தொடர்பாளர் பிரசாத் உட்பட பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்நிலையில், தமிழக பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், 'தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க, அனைத்து கட்சிகளும், ஆதரவு அளிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனால், அவரை கட்சி பொறுப்பில் இருந்து, தமிழக பா.ஜ, தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று முன்தினம் நீக்கினார்.
அதைத் தொடர்ந்து, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, நயினார் நாகேந்திரன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, பிரசாத் தெரிவித்தார். இதனால் நேற்று அவரை, கட்சியில் இருந்தே நயினார் நாகேந்திரன் நீக்கினார்.
இதேபோல், பா.ஜ., மாநிலத் தலைமையை விமர்சித்த, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பவானி எட்வின் ஜோஸ் உட்பட, எட்டு நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
