UPDATED : மார் 20, 2026 05:48 PM
ADDED : மார் 20, 2026 05:50 PM
பெருங்குடி:
சரஸ்வதி நாராயணன் கல்லூரி பொருளியல் துறை சார்பில் நவீன பொருளாதார கல்வி, கொள்கை ஆராய்ச்சி தரவு பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு, அனுபவக் கற்றல், ஒருங்கிணைத்தல் என்ற தலைப்பில் தேசிய பயிற்சி பட்டறை நடந்தது.
கல்லூரி முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். பொருளியல் துறை தலைவர் மீனா வரவேற்றார். காமராஜ் பல்கலை பேராசிரியர் புஷ்பராஜ், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி பேராசிரியர் பழனி ஜி.டி.என்., கல்லூரி பேராசிரியர் ரவிச்சந்திரன் பேசினர்.
மதுரை கூட்டுறவு மேலாண்மை நிறுவன பேராசிரியர் அழகு பாண்டியன் பேசினார். நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பொருளியல் துறை பேராசிரியர்கள் கோபாலசுந்தர், ஞானசௌந்தரி, வித்யா, பாண்டி, வனிதா, பூர்ணிமா, திவ்யா ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

