'தினமலர்' சார்பில் அக்.2ம் தேதி நடக்கிறது வித்யாரம்பம் நிகழ்ச்சி
'தினமலர்' சார்பில் அக்.2ம் தேதி நடக்கிறது வித்யாரம்பம் நிகழ்ச்சி
UPDATED : செப் 23, 2025 12:00 AM
ADDED : செப் 23, 2025 09:18 AM

கோவை:
'தினமலர்' மாணவர் பதிப்பின் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி வரும், 2ம் தேதி நடக்க உள்ளது.
விஜயதசமியன்று, வித்யாரம்பம் நிகழ்ச்சியின் வாயிலாக, அறிவுப்பாதைக்கு பிள்ளையார் சுழி போடப்படும் நிகழ்வு, மனதில் இருந்து மறையாது. இந்தாண்டு, 'தினமலர்' நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்கள் சார்பில் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி, வரும் 2ம் தேதி நடக்கவுள்ளது.
ராம்நகர், சத்தியமூர்த்தி ரோட்டில் உள்ள ஸ்ரீ ஐயப்ப பூஜா சங்கத்தில், காலை 7:35 மணியிலிருந்து, காலை 10:00 மணி வரை, வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அனுமதி இலவசம்.
டாக்டராக, இன்ஜினியராக, கலெக்டராக மாற உள்ள குட்டிக் குழந்தைகள், சரஸ்வதிதேவியின் கடாட்சம் முழுமையாக பெற்று, தங்கள் கல்வி பயணத்தை துவக்கவே, இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க, குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, மொபைல்போன் எண் ஆகியவற்றை, 95666 97267 என்ற எண்ணில், காலை 10:00 முதல் மாலை, 5:00 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.