ஜப்பானில் 8வது உளவியல் மாநாடு பல்கலை துணைவேந்தர் பங்கேற்பு
ஜப்பானில் 8வது உளவியல் மாநாடு பல்கலை துணைவேந்தர் பங்கேற்பு
UPDATED : செப் 23, 2025 12:00 AM
ADDED : செப் 23, 2025 05:21 PM
புதுச்சேரி:
ஜப்பானில் நடந்த எட்டாவது உலக உளவியல் மாநாட்டில் புதுச்சேரி பல்கலை துணைவேந்தர் பிரகாஷ் பாபு, பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஆசியா பசிபிக் பள்ளிக்கல்வி உளவியல் கழகத்தின் 8-வது உலக மாநாடு ஜப்பான் டோக்கியோ பல்கலை கழகத்தில் நடந்தது. இந்த மாநாட்டு துவக்க விழாவில் புதுச்சேரி பல்கலைக் கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு பேசுகையில், எனக்கு ஜப்பானில் வசித்த அனுபவமுள்ளது. இங்குள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்விமுறை, நடத்தை பற்றி முழுமையாக தெரியும்.
இந்தியா, ஜப்பான் போன்ற வளரும் நாடுகளில் பள்ளிக்கல்வி உளவியல் மாநாடுகள், மாற்றமடைந்த கல்வி சூழலை எதிர்கொள்ளும் பிரதான நடைமுறைகளை வகுப்பது மிகவும் அவசியம். பள்ளி, கல்லுாரி பல்கலை.,களில் இதை முன்னுரிமையாக போதிக்க வேண்டும் எனப் பேசினார். மாநாட்டில் புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர்கள் கருணாநிதி, பழனிவேலு, லட்சுமி, முருகையன் உள்ளிட்டோர் மாநாட்டில் கட்டுரை சமர்பித்தனர்.
டோக்கியோ பல்கலைக்கழக துணைவேந்தர் ஜிரோ சகாய், இந்திய- ஜப்பான் உறவு செயலர் உமேஷ், மாநாட்டு அமைப்பாளர் பாஞ்ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.