sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துருக்கி 6,000 கி.மீ., துாரம் பாயும் ஏவுகணை அறிமுகம்

துருக்கி 6,000 கி.மீ., துாரம் பாயும் ஏவுகணை அறிமுகம்

துருக்கி 6,000 கி.மீ., துாரம் பாயும் ஏவுகணை அறிமுகம்


UPDATED : மே 08, 2026 08:19 AM

ADDED : மே 08, 2026 08:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 08:19 AM ADDED : மே 08, 2026 08:20 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அங்காரா:
ராணுவத் துறையில் அசுர வளர்ச்சி கண்டு வரும் துருக்கி, தற்போது 6,000 கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணையை அறிமுகப்படுத்தி உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மேற்காசிய நாடான துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 'சஹா - 2026' என்ற பெயரில் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி நடைபெற்று வருகிறது. அந்த நாட்டின் ராணுவம் அமைச்சகம், 'யல்டிரிம்ஹான்' என்ற புதிய ஏவுகணை ஒன்றை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஏவுகணை ஒலியை விட 25 மடங்கு வேகத்திலும், 3,000 கிலோ வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. திரவ எரிபொருளில் இயங்கும் 4 ராக்கெட் என்ஜின்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் தயாரிப்பில் கொடிகட்டிப் பறக்கும் துருக்கி, தற்போது 6,000 கி.மீ., துாரம் வரை பாயும் ஏவுகணையை உருவாக்கி, தன் ராணுவ உற்பத்தியின் வளர்ச்சியை உலகிற்கு காட்டியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us