UPDATED : செப் 17, 2025 12:00 AM
ADDED : செப் 17, 2025 09:33 AM

சென்னை:
'தமிழ்நாடு திறன் போட்டிகள் - 2025'ல் பங்கேற்க, வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், மாநில இளைஞர்களின் திறமைகளை, உலகத் தரத்தில் வெளிப்படுத்த, 'டி.என்., ஸ்கில்ஸ் 2025 - திறன் திருவிழா' போட்டிகள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடத்தப்பட உள்ளன.
இதில் வெற்றி பெறுவோர், 'இந்தியா ஸ்கில்ஸ் - 2026' எனும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வாய்ப்பு பெறுவர். அதில் வெற்றி பெறுவோர், உலகத் திறன் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.
தனிப்பட்ட திறன் மற்றும் குழு திறன் என, இரு வகையான பிரிவுகளில், போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர், வரும் 30ம் தேதிக்குள், https://naanmudhalvan.tn.gov.in/tnskills/ இணையதளம் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.