பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஐ.ஐ.டி.,யில் திறன்மேம்பாடு பயிற்சி
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஐ.ஐ.டி.,யில் திறன்மேம்பாடு பயிற்சி
UPDATED : ஏப் 03, 2026 07:34 PM
ADDED : ஏப் 03, 2026 07:35 PM

சென்னை:
பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு, சென்னை ஐ.ஐ.டி., சார்பில் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.
சென்னை ஐ.ஐ.டி., பிரவர்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் மற்றும் போத் பிரிட்ஜ் கல்வி அமைப்பு இணைந்து, பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர், ஆசிரியர்களுக்கு கோடை கால திறன் பயிற்சிகளை அறிமுகம் செய்துள்ளன.
இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., பிரவர்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் அதிகாரி, பாலமுரளி சங்கர் கூறியதாவது:
பாரம்பரிய கல்விக்கும், நிஜவாழ்க்கை தேவைகளுக்கும் இடையேயான, இடைவெளியை நிரப்பிடும் வகையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், ஆசிரியர்களுக்கு கோடை கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. சைபர் பாதுகாப்பு, தொழில்முனைவு, நிதி மேலாண்மை ஆகியவை குறித்து பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, படைப்பாற்றல், விமர்சன சிந்தனைகளை வளர்க்க, பல்வேறு பாடங்கள் வழங்கப்பட உள்ளன. ஆசிரியர்களுக்கு, வகுப்பறை கற்பித்தல் திறன் மேம்பாடு, மாணவர்களை ஊக்கப்படுத்தும் திறன் ஆகியவை குறித்து பயிற்சி வழங்கப்படும்.
இந்த பயிற்சிகள் ஜூன் மாதம் வரை நடக்கும். இதற்காக, https://bodhbridge.iitmpravartak.org.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
