UPDATED : மார் 24, 2026 06:32 PM
ADDED : மார் 24, 2026 06:33 PM
பரமக்குடி:
பரமக்குடி அருகே சோமநாதபுரம் சவுராஷ்டிரா தேசிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட 6 பேர் என்.எம்.எம்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றனர்.
சோமநாதபுரம் சவுராஷ்டிரா தேசிய கல்வி கழக நிர்வாகத்தில் 39 ஆண்டுகளாக நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் (என்.எம்.எம்.எஸ்) ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சாதிக்கின்றனர்.
இந்த ஆண்டு பரமக்குடி கல்வி மாவட்டத்தில் சோமநாதபுரம் சவுராஷ்டிரா தேசிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சிவகார்த்திக் 129, விக்னேஷ் 124 மதிப்பெண்களுடன் தரவரிசையில் 5 மற்றும் 10ம் இடமும், பவித்ரா 107, ஓம்பிரகாஷ் 106 மதிப்பெண்ணுடன் 47 மற்றும் 52வது இடம் பெற்றனர்.
இவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிய மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். வெற்றி பெற்ற மாணவர்களை தேசிய கல்வி கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
இதே போல் பரமக்குடி மஞ்சள்பட்டணம் நகராட்சி பள்ளி மாணவர் பிரவீன் 116, அரியனேந்தல் சுந்தரம் நடுநிலைப் பள்ளி மாணவி பரமேஸ்வரி 101 மதிப்பெண்கள் பெற்று தரவரிசையில் 16 மற்றும் 102வது இடம் பெற்று தேர்வாகினர்.
