தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அவினாசிலிங்கம் பல்கலையில் சிசல் ஆராய்ச்சி மையம் துவக்கம்

அவினாசிலிங்கம் பல்கலையில் சிசல் ஆராய்ச்சி மையம் துவக்கம்

அவினாசிலிங்கம் பல்கலையில் சிசல் ஆராய்ச்சி மையம் துவக்கம்


UPDATED : ஜூன் 08, 2026 01:14 PM

ADDED : ஜூன் 08, 2026 01:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 08, 2026 01:14 PM ADDED : ஜூன் 08, 2026 01:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், 'நிலைத்த சிசல் அமைப்புகளுக்கான மையம்' என்ற புதிய ஆராய்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டு மையத்தை துவங்கியுள்ளது.

நிகழ்வுக்கு வேந்தர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் தலைமை இயக்குனர் கலைச்செல்வி மையத்தை திறந்து வைத்தார்.

போபால் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்துடன் இணைந்து இந்தியாவின் தேசிய சிசல் இயக்கத்தின் கீழ் இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

பத்து ஏக்கர் பரப்பளவில் சிசல் பண்ணையை மையமாகக்கொண்டு, சிசல் சாகுபடி, இயந்திரமய நார் பிரித்தெடுத்தல், மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தொழில்முனைவு வளர்ச்சி போன்ற முழுமையான செயல்பாடுகளை மேற்கொள்ளவுள்ளது.

பதிவாளர் இந்து, ஒருங்கிணைப்பாளர் வனிதாமணி, துணைவேந்தர் பாரதி, திருவனந்தபுரம் சி.எஸ்.ஐ.ஆர்., தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் ஆனந்தராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us