UPDATED : செப் 26, 2025 08:34 AM
ADDED : செப் 26, 2025 08:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சி.பி.எஸ்.இ., எனும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில், ஒற்றை பெண் குழந்தைகள் உதவித் தொகை திட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முடித்து, தற்போது, பிளஸ் 1 படித்து வரும் மாணவியர், அக்.23ம் தேதிக்குள், https://cbse.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதி பெறும் மாணவியருக்கு, மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.