UPDATED : மே 18, 2026 03:20 PM
ADDED : மே 18, 2026 03:22 PM
கிருஷ்ணகிரி:
விளையாட்டு விடுதி சேர்க்கைக்கு, மாநில அளவிலான கைப்-பந்து போட்டி நேற்று நடந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், மாநில அளவில் விளையாட்டு விடுதி சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு கடந்த, 15 முதல் கைப்பந்து விளையாட்டுக்கு தேர்வு போட்டிகள் நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த, 15ல் நடந்த தேர்வு போட்டியில், 6 மற்றும், 7ம் வகுப்பிற்காக விண்ணப்பித்த, 14 மாணவர்களில், 10 பேரும், 16ல் நடந்த, 8 மற்றும், 9ம் வகுப்பிற்காக விண்ணப்பித்த, 35 மாணவர்களில், 27 பேரும் நேற்று நடந்த, 11ம் வகுப்பிற்கான தேர்வு போட்டிக்கு விண்ணப்பித்த, 48 மாணவர்களில், 39 பேரும் பங்கேற்றனர்.
இத்தேர்வு போட்டியில், திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளர் சாந்தி, தர்மபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன், கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொ) நடராஜ முருகன், அரியலுார் கைப்பந்து பயிற்றுனர் ஹரிஹரன், விழுப்புரம் கைப்பந்து பயிற்றுனர் சீதாராமன், கிருஷ்ணகிரி கைப்பந்து பயிற்றுனர் செங்குட்டுவன் மற்றும் விளையாட்டு அரங்க பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.
