UPDATED : ஏப் 06, 2026 09:57 AM
ADDED : ஏப் 06, 2026 09:58 AM
அ நிறம் | அளவு
சென்னை:
நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடந்த விண்வெளி குடியேற்ற செயல்திட்ட போட்டிகளில், ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவ, மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள நாசா என்.எஸ்.எஸ்., விண்வெளி குடியேற்ற செயல் திட்டத்திற்கான போட்டி நடந்தது. இப்போட்டியில், 31 நாடுகளைச் சேர்ந்த 549க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில், நம் நாட்டில் உள்ள பள்ளிகளின், 80 செயல்திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன. அதில் தமிழகம் முழுதும் உள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர், 57 செயல் திட்டங்களில் வெற்றி பெற்று, முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பரிசுகளை பெற்று சாதித்துள்ளனர்.
இவர்கள் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக, அப்பள்ளியின் நிர்வாகம் தெரிவித்தது.
