sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.யு., தேர்வு முடிவு இன்று வெளியீடு

பி.யு., தேர்வு முடிவு இன்று வெளியீடு

பி.யு., தேர்வு முடிவு இன்று வெளியீடு


UPDATED : ஏப் 09, 2026 12:52 PM

ADDED : ஏப் 09, 2026 12:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2026 12:52 PM ADDED : ஏப் 09, 2026 12:53 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
கர்நாடகாவில் பி.யு., தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. 'டிஜி லாக்கர்' செயலி மூலம் மதிப்பெண் பட்டியல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று, பள்ளிக்கல்வி துறை அறிவித்து உள்ளது.

கர்நாடகாவில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி துவங்கிய, பி.யு., தேர்வு மார்ச் 17ல் நிறைவு பெற்றது.

புதிதாக தேர்வு எழுதியவர்கள், மறுதேர்வர்கள் உட்பட 7.10 லட்சம் பேர் எழுதினர். ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று, பள்ளி கல்வி துறை கூறி இருந்தது.

ஆனால் ஏப்ரல் மாதம் துவங்கிய பின்னும், தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்படவில்லை. நேற்று முன்தினம் முடிவுகள் வெளியாகலாம் என்ற தகவல் பரவியது. ஆனால் பள்ளி கல்வி துறை மறுத்தது.

இந்நிலையில் ஒரு வழியாக, தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. மதியம் 03:00 மணிக்கு மல்லேஸ்வரத்தில் உள்ள, கர்நாடக பள்ளி தேர்வுகள் மற்றும் மதிப்பீடு வாரிய அலுவலகத்தில், பள்ளி கல்வி அமைச்சர் மது பங்காரப்பா தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.

'டிஜிலாக்கர்' செயலி இதன்பின் https://karresults.nic.in என்ற, இணையதள முகவரியில் சென்று, மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை பார்த்து கொள்ளலாம்.

வழக்கமாக தேர்வு முடிவுகளை பார்க்க, கணினி மையங்களில் மாணவர்கள் ஒரே நேரத்தில் குவிவதால், சர்வர் பிரச்னை ஏற்பட்டு விடுகிறது. இதில் மதிப்பெண்களை பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது.

இதை சரிசெய்ய இம்முறை டிஜிலாக்கர் செயலியில் மதிப்பெண்களை பார்க்கலாம் என்றும், பள்ளிக்கல்வி துறை அறிவித்து உள்ளது. மொபைல் போன், 'பிளே ஸ்டோரில்' சென்று, டிஜிலாக்கர் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

செயலி பயன்பாட்டிற்கு வந்த பின், அதில் பல மாநில கல்வி வாரியங்கள் பெயர் பட்டியல் இருக்கும். கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மதிப்பீடு வாரிய பெயரை கண்டுபிடித்து தேர்வு செய்ய வேண்டும்.

ஓட்டுப்பதிவால் மாற்றம்


அதில் பி.யு., 2வது ஆண்டு மதிப்பெண் பட்டியல் என்ற, 'ஆப்ஷன்' இருக்கும். அதில் மாணவர்கள் தேர்வுக்காக கொடுத்த பதிவெண்ணை போட்டால், மதிப்பெண் பட்டியல் வந்துவிடும். இதனை பதிவிறக்கம் செய்து பி.டி.எப்., வடிவில் எடுத்து கொள்ளலாம்.

இது அதிகாரபூர்வ மதிப்பெண் பட்டியலாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. மேல்படிப்பு சேர்க்கைக்காக இந்த மதிப்பெண் பட்டியலை பயன்படுத்தி கொள்ளலாம் .

வழக்கமாக காலையில் தான் தேர்வு முடிவுகள் வெளியாகும். பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளில் இடைத்தேர்தலை ஒட்டி, இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதை கருத்தில் கொண்டு, தேர்வு முடிவுகள் வெளியிடுவதை மதியத்திற்கு மாற்றி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us