மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு டேப்லாயிடு, உபகரணங்கள் வழங்கல்
மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு டேப்லாயிடு, உபகரணங்கள் வழங்கல்
UPDATED : செப் 16, 2025 12:00 AM
ADDED : செப் 16, 2025 08:43 AM

திருபுவனை :
திருபுவனை தொகுதியில் மருத்துவ படிப்பிற்கு அரசு மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு வட்டார காங்., பொதுச்செயலாளர் வேலு தனது சொந்த செலவில் டேப்லாயிடு மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
புதுச்சேரி திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள்குப்பம், மதகடிப்பட்டு மற்றும் திருபுவனை பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 5 பேர் அரசு மூலம் இந்த ஆண்டு மருத்துவக் கல்லுாரியில் பயில தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு திருபுவனை வட்டார காங்., பொதுச்செயலாளர் குச்சிப்பாளையம் வேலு பொன்னாடை அணிவித்து, தனது சொந்த செலவில் டேப்லாயிடு மற்றும் மருத்துவ படிப்புக்கான உபகரணங்களை வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் மாநில காங்., பொதுச்செயலாளர் தனுசு, திருபுவனை வட்டார காங்., தலைவர்கள் ஜெயக்குமார், துளசிங்கபெருமாள், காங்., மூத்த தலைவர் வெங்கடேசன், பி.சி.சி., நடராஜன், செயற்குழு உறுப்பினர் அமிர்தராஜ், சோசியல் மீடியா தலைவர் லோகநாதன், வட்டார காங்., பொதுச் செயலாளர்கள் சேகர், நாகராஜன், இளைஞர் காங்., தொகுதி தலைவர் தீனதயாளன், நிர்வாகிகள் ஆனந்த், சீனுவாசன், திலோத், ஆகியோர் கலந்து கொண்டனர்.