UPDATED : ஜூன் 11, 2026 04:41 PM
ADDED : ஜூன் 11, 2026 04:43 PM
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வரும் 19ம் தேதி, தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என, கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 19ம் தேதி, காலை 10:00 மணியளவில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
அதில், 30க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு, தங்களுக்கு தேவையான வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
முகாமில் பங்கேற்க உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
முகாமில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்று, தனியார் துறையில் சி.என்.சி., குவாலிட்டி ஆய்வாளர், சைட் இன்ஜினியர் உள்ளிட்ட பல்வேறு வகையான பணி வாய்ப்பை பெறலாம்.
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுவோரின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
