ஆசிய இளைஞர் விளையாட்டில் இந்தியா சாதனை- பிரதமர் வாழ்த்து
ஆசிய இளைஞர் விளையாட்டில் இந்தியா சாதனை- பிரதமர் வாழ்த்து
UPDATED : நவ 03, 2025 07:37 AM
ADDED : நவ 03, 2025 07:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்திய இளம் வீரர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு, மொத்தம் 48 பதக்கங்கள் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டதாவது:
நமது இளம் வீரர்கள் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளனர். அவர்களின் ஆர்வம், உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பு இவர்களின் வெற்றியில் வெளிப்படுகிறது. இளம் வீரர்கள் மற்றும் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எதிர்கால முயற்சிகளிலும் மேலும் உயரங்கள் அடைய வாழ்த்துகள்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

