தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்பெற்ற மாணவ, மாணவியர் விபரம்

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்பெற்ற மாணவ, மாணவியர் விபரம்

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்பெற்ற மாணவ, மாணவியர் விபரம்


UPDATED : மே 10, 2026 07:35 PM

ADDED : மே 10, 2026 07:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 07:35 PM ADDED : மே 10, 2026 07:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் விபரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, அரசு பள்ளிகளில் கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பவுசியா, 582 மதிப்பெண்கள், மாயனுார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவன் சஞ்சய்தரன், 580 மதிப்பெண்கள், மாணவி அன்னகாமாட்சி, 578 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

அதே போல், அரசு உதவி பெறும் பள்ளிகளில், கரூர் பசுபதிபாளையம் ஸ்ரீ சாரதா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜீவிதா, 571 மதிப்பெண், ஓரியண்டல் அராபிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அஸ்மினா ரினாஸ், 569 மதிப்பெண், ஆயிஷா ரிபாயா, 565 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மேலும், அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் புன்னம்சத்திரம் பள்ளி மாணவி இவான் ஜலின் ரச்சேல், 567 மதிப்பெண், மாணவர் யுகன், 522 மதிப்பெண், மாணவி விஜயலட்சுமி, 520 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us