தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி., மெட்ராஸ் பி.எஸ்., படிப்பு எஸ்.சி., மாணவர்களுக்கு வாய்ப்பு

ஐ.ஐ.டி., மெட்ராஸ் பி.எஸ்., படிப்பு எஸ்.சி., மாணவர்களுக்கு வாய்ப்பு

ஐ.ஐ.டி., மெட்ராஸ் பி.எஸ்., படிப்பு எஸ்.சி., மாணவர்களுக்கு வாய்ப்பு


UPDATED : ஜூன் 02, 2026 10:40 AM

ADDED : ஜூன் 02, 2026 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 02, 2026 10:40 AM ADDED : ஜூன் 02, 2026 10:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
'அனைவருக்கும் ஐ.ஐ.டி., மெட்ராஸ்' திட்டத்தின் கீழ், ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு இல்லாமல், ஐ.ஐ.டி., மெட்ராஸ் வழங்கும், பி.எஸ்., இணையவழி பட்டப் படிப்பில் சேர, எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் படிக்கும், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள், நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., மெட்ராஸில் படிக்கும் வகையில், 'அனைவருக்கும் ஐ.ஐ.டி., மெட்ராஸ்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு எழுதாமல், நேரடியாக ஐ.ஐ.டி., மெட்ராஸ் வழங்கும், இணையவழி பி.எஸ்., பட்டப் படிப்புகளில், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம்.

அதன்படி, தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள், வானுார்தியியல் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில், நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இதற்கு ஐ.ஐ.டி., மெட்ராஸ் நடத்தும் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெறுவது அவசியம். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும், மாணவ மாணவியரின், நான்கு ஆண்டு கல்விச் செலவை, 'தாட்கோ' மற்றும் ஐ.ஐ.டி., மெட்ராஸ் நிறுவனம் இணைந்து ஏற்க உள்ளன.

நடப்பாண்டு, இத்திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் தொடர்பான கூடுதல் தகவல்களை, tamilnaduvolunteers.org/scholarship இணைய தளத்தில் அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us