UPDATED : மே 20, 2026 06:19 PM
ADDED : மே 20, 2026 06:20 PM
கோவை:
திருச்சி, இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ.எம்.,) மற்றும் கோவை சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லுாரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் மாணவர்கள், முழுமையான கல்வித் திறன் மேம்பாடு, ஜவுளி ஆராய்ச்சி மற்றும் புதுமை, பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளில் கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கும்.
இந்நிகழ்வில், திருச்சி ஐ.ஐ.எம்., டீன் சரவணன் பேசுகையில், “மேம்படுத்தப்பட்ட கல்வித் தரநிலைகள் மற்றும் கூட்டுச் செயல்பாடுகளின் வாயிலாக, ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக உருவெடுப்பதற்கு வழிவகுக்கும்,” என்றார்.
சர்தார் வல்லபாய் படேல் கல்லுாரியின் இயக்குனர் பிஸ்வரஞ்சன் கோஷ் மற்றும் இரு நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் கல்விசார் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
