பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு அமைச்சர் பங்கேற்பு
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு அமைச்சர் பங்கேற்பு
UPDATED : செப் 24, 2025 08:56 AM
ADDED : செப் 24, 2025 08:57 AM

கீழக்கரை:
கீழக்கரை முகமது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் உள்ள ஆடிட்டோரியத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் மகேஷ் தலைமை வகித்து பேசியதாவது:
ஆசிரியர்கள் நாம் அனைவரும் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். நமக்குள் பேசிக் கொண்டாலும் வெளியே தெரியக்கூடாது. எல்லா பள்ளிகளுக்கும் ஹைடெக் லேப் வசதி உள்ளது. தற்போது மேம்படுத்தப்பட்ட டெக்னாலஜி மூலம் தரம் மேம்பாடு செய்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை துவங்க உள்ளது. ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் பள்ளி பாடப் புத்தகத்தை தாண்டி கிரியேட்டிவிட்டி அவசிய தேவையாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 35 வது ஆய்வுக் கூட்டமாக பங்கேற்கிறேன்.
மேலும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களை நன்றாக தயார்படுத்தி வைக்க வேண்டும். அடித்தளம் மட்டுமே உயர் கல்விக்கான வழிகாட்டுதல், நாம் வாங்கும் சம்பளத்தை சரியாக பயன்படுத்துவது போல மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சிறந்த கல்வி மாவட்டமாக உருவாக்குவதற்கு நாம் முனைப்பு காட்ட வேண்டும்.
நாம் சொல்லக்கூடிய கோட் வேர்ட் பாடத்திட்ட வார்த்தைகளை பள்ளியில் மாணவர்களுக்கு சொல்ல கூடாது. நன்றாக பாடம் நடத்தக்கூடிய ஆசிரியர்கள் தங்களுடைய கல்வித் திறன் மேம்பாட்டை யூடியூப்-பில் அப்லோடு செய்து அனைவரும் பார்க்கும் வகையில் செய்யலாம் திறமை மிக்க ஆசிரியர்களுக்கு எப்போதும் பாராட்டுக்கள் உண்டு என்றார்.
மேலும் 11 ஒன்றியங்களிலும் குறிப்பிட்ட ஆசிரியர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு கற்றல் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டது.