UPDATED : மே 27, 2026 08:58 AM
ADDED : மே 27, 2026 09:01 AM

நீதிமன்ற பணிகளை மேற்கொள்ளுதல் மட்டுமன்று, சமூக நீதி, மனித உரிமைகள், நிறுவன சட்டம், சைபர் குற்றங்கள், ஐ.பி.ஆர்., போன்ற பல துறைகளில் சட்ட நிபுணர்களின் தேவை அதிகரித்து வருகிறது.
எந்தவித நுழைவுத்தேர்வும் இன்றி பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் பல்கலைக்கழக இணைப்பு பெற்ற அரசு, தனியார் கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறலாம்.
ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள்:
பி.ஏ.எல்எல்.பி.,
பி.ஏ.எல்எல்.பி., -ஹானர்ஸ்
பி.பி.ஏ.எல்எல்.பி., -ஹானர்ஸ்
பி.காம்.எல்எல்.பி., -ஹானர்ஸ்
பி.சி.ஏ.எல்எல்.பி., -ஹானர்ஸ்
படிப்பு காலம்:
5 ஆண்டுகள்
தகுதிகள்:
பி.ஏ.எல்எல்.பி., படிப்பில் சேர 12ம் வகுப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். ஹானர்ஸ் சட்டப் படிப்புகளுக்கு 12ம் வகுப்பில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு 60 சதவீத மதிப்பெண் போதுமானது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூன் 5
விபரங்களுக்கு:
www.tndalu.ac.in
