UPDATED : ஜூன் 19, 2026 10:47 AM
ADDED : ஜூன் 19, 2026 10:49 AM
'நீட்' மறு தேர்வை, சுதந்திரமாகவும் நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும். இப்பணிகளை ஒருங்கிணைக்க, அனைத்து மாநிலங்களுக்கும் அதிகாரிகள் ஆய்வுக்கு செல்வர். மாணவர்கள் எந்த மன அழுத்தமும் இன்றி, மறுதேர்வை எழுத தேவையான வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- தர்மேந்திர பிரதான், மத்திய கல்வி அமைச்சர், பா.ஜ.,
நம்ப முடியவில்லை!
தேர்தலுக்கு முன், மத்திய அரசின், 'பி.எம்., ஸ்ரீ' திட்டத்தை எதிர்த்த காங்கிரஸ், தற்போது அந்த நிலைப்பாட்டை கைவிட்டுள்ளது. இத்திட்டத்தை ஏற்க, இந்த அரசு அளிக்கும் விளக்கம் நம்பும்படியாக இல்லை. காங்., ஆளும் பிற மாநிலங்களில் இத்திட்டம் உள்ளதால், இது அக்கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.
- பினராயி விஜயன், கேரள முன்னாள் முதல்வர், மார்க்சிஸ்ட். கம்யூ., கட்சி
நக்சல் இல்லா இந்தியா!
நம் நாட்டில், நக்சல் இயக்கம் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டுள்ளன. நம் பட்ஜெட்டில், ராணுவத்துக்கான நிதி, 8 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, ஆயுதப் படைகளை நவீனப்படுத்தவும், உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தவும், மாறிவரும் உலகளாவிய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள நாட்டைத் தயார்படுத்தவும் உதவியுள்ளது.
- நித்யானந்த் ராய், மத்திய இணையமைச்சர், பா.ஜ.,
