UPDATED : ஏப் 10, 2026 11:12 AM
ADDED : ஏப் 10, 2026 11:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி:
காந்திகிராம பல்கலையில் பயிற்சி, வேலைவாய்ப்பு மையம் மூலம் இலவச வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார்.
அவர் பேசுகையில், “வேலைவாய்ப்பு முயற்சிகள், மாணவர்களின் வேலைத்திறன் மேம்படுத்துவதிலும் கல்வி, தொழில் துறை இடையிலான இடைவெளியை குறைப்பதிலும், நிலையான கிராமப்புற வாழ்வாதாரத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது,” என்றார்.
பேராசிரியர் அனிதாபயஸ் வரவேற்றார். பொறுப்பு பதிவாளர் சுந்தரமாரி பேசினார். ஏற்பாடுகளை மைய துணை இயக்குனர் அருணாச்சலம், வேலைவாய்ப்பு அலுவலர் கிங்ஸ்லி செய்திருந்தனர்.

