UPDATED : ஏப் 07, 2026 11:04 AM
ADDED : ஏப் 07, 2026 11:05 AM
பள்ளிப்பாளையம்:
பள்ளிப்பாளையம் அருகே, எஸ்.பி.பி., காலனி பகுதியில் செயல்பட்டு வரும், எஸ்.பி.பி., காகித ஆலை மனமகிழ் மன்றம் சார்பில், ஆண், பெண்களுக்கான கைப்பந்து போட்டி, கடந்த, 2 முதல், 4 வரை, மூன்று நாட்கள் நடந்தது. இப்போட்டியில் ஏராளமான கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
ஆண்களுக்கான போட்டியில், முதல் பரிசை வைஷ்ணவா கல்லுாரி, இரண்டாம் பரிசை, பனிமலர் கல்லுாரி, மூன்றாம் பரிசை, கற்பகம் கல்லுாரி, நான்காம் பரிசை, எஸ்.டி.ஏ.டி., கல்லுாரி பெற்றது. பெண்களுக்கான போட்டியில், முதல் பரிசை சிவந்தி ஆதித்தனார் கல்லுாரி, இரண்டாம் பரிசை, பனிமலர் கல்லுாரி, மூன்றாம் பரிசை, பி.கே.ஆர்., கல்லுாரி, நான்காம் பரிசை, ஜோசப் கல்லுாரி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது.
தனியார் காகித ஆலை இயக்குனர் கணேஷ் பாலகிருஷ்ண பத்தி கலந்து கொண்டு பரிசு வழங்கினர். விழாவில், மனமகிழ் மன்ற தலைவர் அழகர்சாமி, துணை தலைவர் ராஜாசுந்தரம், செயலாளர் சிவகுமார் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
