பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர் கல்வி படிக்க விழிப்புணர்வு
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர் கல்வி படிக்க விழிப்புணர்வு
UPDATED : மே 07, 2026 07:04 PM
ADDED : மே 07, 2026 07:05 PM
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, உயர் கல்வி படிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
செங்கல்பட்டு, மதுராந்தகம் கல்வி மாவட்டங்களில், 102 அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இங்கு, 2025 - 26ம் கல்வி ஆண்டில், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ மாணவியர், தேர்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
இதனால் உயர் கல்வியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி உத்தரவிட்டார். அதன்படி,
அந்தந்த பள்ளிகளில், உயர்கல்வி வழிகாட்டி மைய பொறுப்பாசிரியர், தலைமையாசிரியர் உள்ளிட்டோர் பிளஸ் 2 முடித்த மாணவ மாணவியருக்கு, உயர்கல்வி சம்பந்தமான படிப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினர். இதில், மாவட்டம் முழுவதும் 6, 534 மாணவர்கள் பங்கேற்றனர்.
