தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆர்.ஆர்.பி., தேர்வுக்கு பயிற்சி 26ல் இலவச வகுப்பு துவக்கம்

ஆர்.ஆர்.பி., தேர்வுக்கு பயிற்சி 26ல் இலவச வகுப்பு துவக்கம்

ஆர்.ஆர்.பி., தேர்வுக்கு பயிற்சி 26ல் இலவச வகுப்பு துவக்கம்


UPDATED : பிப் 22, 2026 11:44 AM

ADDED : பிப் 22, 2026 11:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 22, 2026 11:44 AM ADDED : பிப் 22, 2026 11:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஆர்.ஆர்.பி., 'குரூப்-டி' போட்டி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும், 26ல் துவங்குகிறது.

இது குறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஆர்.ஆர்.பி., எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தால் 'குரூப்-டி' பிரிவில், 22,195 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக வரும் மார்ச், 2 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வை தமிழிழும் எழுதலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த போட்டி தேர்வர்கள் பயனடையும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள் வரும், 26 முதல் வாரநாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை, 10:00 மணி முதல் மதியம், 01:00 மணி வரை நடக்கிறது.

இந்த பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகளும், முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் https://tinyurl.com/bddcy2tw என்ற இணைப்பின் மூலம், தங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 04343 -291983 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us