/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

200 தொகுதிகளில் வெற்றி பெற தி.மு.க., மாணவர் அணி தீர்மானம்

/

200 தொகுதிகளில் வெற்றி பெற தி.மு.க., மாணவர் அணி தீர்மானம்

200 தொகுதிகளில் வெற்றி பெற தி.மு.க., மாணவர் அணி தீர்மானம்

200 தொகுதிகளில் வெற்றி பெற தி.மு.க., மாணவர் அணி தீர்மானம்


UPDATED : மே 27, 2025 12:00 AM

ADDED : மே 27, 2025 09:54 AM

Google News

UPDATED : மே 27, 2025 12:00 AM ADDED : மே 27, 2025 09:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என, தி.மு.க., மாணவர் அணி சார்பில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க., மாணவர் அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழகத்தின் கல்வி உரிமையை மீட்க, சட்டப் போராட்டம் நடத்தும் முதல்வருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். கருணாநிதி பெயரில் பல்கலை அமைக்கப்படும் என, அறிவித்த முதல்வருக்கு நன்றி.

கல்வி உரிமை சட்டத்துக்கான நிதியை உடனே ஒதுக்கக்கோரி, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். கீழடி அகழாய்வு அறிக்கையை, மத்திய அரசு திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது. வரும் சட்டசபை தேர்தலில், எதிர்க்கட்சிகளுக்கு தக்க பாடம் புகட்ட, '200 தொகுதிகளில் வெற்றி' என்ற, முதல்வர் ஸ்டாலின் முழக்கத்தை நிறைவேற்றுவோம்.

இவ்வாறு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.