sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறன் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு அழைப்பு

திறன் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு அழைப்பு

திறன் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு அழைப்பு


UPDATED : பிப் 11, 2026 04:50 PM

ADDED : பிப் 11, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2026 04:50 PM ADDED : பிப் 11, 2026 04:51 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன், வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

கலெக்டர் சினேகா அறிக்கை:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான 'தாட்கோ' மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தற்போது, தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உலகத்தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன், உயர் தொழில்நுட்ப ஆடை வடிவமைப்பு, மேலாண்மை, அழகுக்கலை, சிகை அலங்கார மேலாண்மை ஆகிய பயிற்சிகள் வழங்க உள்ளது.
இப்பயிற்சிக்கு 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களாகவும், கல்வி தகுதி பிளஸ் 2 தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சியை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரில் விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us