UPDATED : மே 10, 2026 07:29 PM
ADDED : மே 10, 2026 07:31 PM
குறிஞ்சிப்பாடி:
குறிஞ்சிப்பாடி, அருணாச்சலா பதின்ம மேல்நிலைப் பள்ளி வட்டார அளவில் சிறப்பிடம் பெற்று, சாதனை படைத்துள்ளது. பள்ளி மாணவர்கள் டென்னி பிரின்ஸ், 586 மதிப்பெண்கள்; மாணவி நிவேதா, 583 மதிப்பெண்கள்;
மாணவி கிஷோரி, 575 மதிப்பெண்கள்; பெற்று பெருமை சேர்த்துள்ளனர். பல்வேறு பாடப்பிரிவுகளில் மொத்தம், 8 மாணவர்கள், 100 மதிப்பெண்கள் பெற்றனர்.
மாணவர்கள் டென்னி பிரின்ஸ் கணிதம், கிஷோரி, ஜித்திய ஸ்ரீ, தரணி ஸ்ரீ, அக்ஷய பிரதா, விக்னேஷ்வரன், அபிஷேக் ஆகிய, 6 மாணவர்கள் கணினி அறிவியல் பாடத்திலும்; மாணவி சுமிதா உயிரியல் பாடத்திலும், 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், 10 மாணவர்கள் பல்வேறு பாடங்களில், 99 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இந்தாண்டு, 550க்கு மேல் மதிப்பெண், 13 சதவீத மாணவர்களும்; 500க்கு மேல் 30 சதவீத மாணவர்களும்; 450க்கு மேல் 63 சதவீத மாணவர்களும்; மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பள்ளி தாளாளர் பன்னீர்செல்வம், செயலாளர் சட்டநாதன், நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன், இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் பிற இயக்குனர்கள் சாதனை படைத்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தி, பரிசுகள் வழங்கி, பாராட்டி பேசி கவுரவித்தனர்.
பள்ளி முதல்வர் ஜோதிலிங்கம், ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், துணை முதல்வர் அபிராமி, ஆசிரியர்கள், பெற்றோர் உடனிருந்தனர்.
