UPDATED : மே 05, 2026 10:07 AM
ADDED : மே 05, 2026 10:07 PM

தமிழகத்தில், இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான 2026-2027 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. கலந்தாய்வு வாயிலாக நடைபெற உள்ள மாணவர் சேர்க்கைக்கு தேவையான ஆவணங்களை மாணவர்கள் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொள்வது சிறந்தது.
இட ஒதுக்கீடு:
* அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில ஒதுக்கீட்டு இடங்கள்
* சுயநிதி மற்றும் மாநில தனியார் பல்கலைக்கழக மருத்துவ / பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள்
* அதே கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்
* வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டு இடங்கள்
தேவையான ஆவணங்கள்:
* நீட் யு.ஜி,, - 2026 அனுமதி அட்டை
* 10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்பு அதற்கு இணையான தேர்வு மதிப்பெண் சான்றிதழ்
* 12ம் வகுப்பு அல்லது இணையான படிப்பு முடித்த பின் பெறப்பட்ட மாற்று சான்றிதழ்
* 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் படித்ததற்கான சான்று (தமிழ்நாடு பூர்வீகம் அல்லாதவர்களுக்கு பொருந்தும்)
* சாதி சான்றிதழ் (தேவைப்பட்டால்)
* பிறப்பிடச் சான்றிதழ் (தேவைப்பட்டால்)
* தமிழ்நாடு பூர்வீகம் அடிப்படையில் இடஒதுக்கீடு கோருபவர்களது பெற்றோரில், ஒருவரின் சாதி சான்றிதழ்
* கட்டண விலக்கு கோரும் மாணவர்களது பெற்றோரின் வருமான சான்றிதழ்
* பிற மாநில வாரியங்கள்/பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
நிர்வாக ஒதுக்கீடு சிறுபான்மையினர் பிரிவு:
மொழி / மத சிறுபான்மையினர் சான்றிதழ்
நிர்வாக ஒதுக்கீடு வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு:
* நிதி ஆதரவாளரது வெளிநாடு வாழ் இந்தியர் அந்தஸ்தை உறுதி செய்யும் சான்று (சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள இந்திய தூதரக முத்திரையுடன்) அல்லது 04.03.2021க்கு முன் வழங்கப்பட்ட ஓ.சி.ஐ., அட்டை
* நிதி ஆதரவாளர் மற்றும் மாணவரது உறவு சான்றிதழ் (வருவாய் துறை அதிகாரியால் வழங்கப்பட்டது) மற்றும் ஆதரவாளரின் செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட்
* என்.ஆர்.இ., வங்கி கணக்கு விவர நகல்
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு:
* 2022-2023க்கு முன் 12ம் வகுப்பு முடித்தவர்கள், 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்றதற்கான (Bonafide) சான்றிதழ் (மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழங்கியது)
* 2022-2023 அல்லது அதற்கு பிந்தைய கல்வியாண்டில் முடித்தவர்கள் தனி சான்றிதழ் தேவையில்லை.
விபரங்களுக்கு:
https://tnmedicalselection.net
