sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : மே 28, 2026 06:54 PM

ADDED : மே 28, 2026 06:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 28, 2026 06:54 PM ADDED : மே 28, 2026 06:55 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கடலுார்:
சமுதாய வங்கி, ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், 14 வட்டார பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊராட்சி அளவிலான கூட்டமைப்பை சார்ந்த பெண் சுய உதவிக் குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

சுய உதவிக் குழு ஊக்குநராக குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர் பணிபுரியும் ஊராட்சியை சார்ந்தவராக இருத்தல் அவசியம். மக்கள் நிலை ஆய்வால் கண்டறியப்பட்ட இலக்கு, மக்களாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு கீழ் இருத்தல் வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக எழுதப் படிக்கவும் மற்றும் கணக்கிடும் திறன் உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

மதிப்பூதியமாக மாதம் ரூ.2500 வழங்கப்படும். வட்டாரத்திற்குட்பட்ட, வட்டார இயக்க மேலாளர் கையொப்பத்துடன், திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பூமாலை வணிக வளாகம், நெல்லிக்குப்பம் மெயின் ரோடு, கடலுார் - 1 என்ற முகவரியில், நாளை மாலை 05:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us