நீட் வினாத்தாள் கசிவுக்கு காரணமான மற்றொரு சூத்ரதாரி கைது
நீட் வினாத்தாள் கசிவுக்கு காரணமான மற்றொரு சூத்ரதாரி கைது
UPDATED : மே 17, 2026 12:04 PM
ADDED : மே 17, 2026 12:05 PM
புதுடில்லி:
நீட் வினாத்தாள் கசிவுக்கு காரணமான மற்றொரு சூத்ரதாரியான புனேயை சேர்ந்த தாவரவியல் ஆசிரியரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
மருத்துவ இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது இதற்கான வினாத்தாள் முன்னரே கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று மஷாராஷ்டிராவின் புனேயை சேர்ந்த வேதியியல் பேராசிரியர் குல்கர்னி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் மற்றொரு சூத்ரதாரியான புனேயை சேர்ந்த தாவரவியல் பெண் ஆசிரியரை விசாரணைக்கு பிறகு சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இது குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:
மனிஷா குருநாத் மந்தாரே என்ற மூத்த தாவரவியல் ஆசிரியர் புனேயை சேர்ந்தவர். அவரிடம் டில்லியில் விசாரணை நடந்து வந்தது. தேசிய தேர்வு முகமையால் நீட் தேர்வு தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதனால், உயிரியல் மற்றும் தாவரவியல் வினாத்தாள்களை அவரால் எளிதில் அணுக முடிந்தது.
நீட் நுழைவுத்தேர்வக்கான பயிற்சி எடுப்பு வகுப்பு எடுத்து வந்தார். தேர்வுப் பணியில் கிடைத்த வினாத்தாள்களை அவர் மாணவர்களிடம் கூறினார். அதனை அவர்கள் புத்தகங்களில் குறித்து வைத்து கொண்டனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
