sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண்மை படிக்கலாம்

வேளாண்மை படிக்கலாம்

வேளாண்மை படிக்கலாம்


UPDATED : மே 13, 2026 03:37 PM

ADDED : மே 13, 2026 03:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2026 03:37 PM ADDED : மே 13, 2026 03:39 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இளநிலை பட்டப்படிப்புகள்:

பி.எஸ்சி.,-(ஹானர்ஸ்) படிப்புகள்: அக்ரிகல்ச்சர், ஹார்ட்டிகல்ச்சர், பாரஸ்ட்ரி, செரிகல்ச்சர், புட்-நியூட்டிரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், அக்ரிபிசினஸ் மேனேஜ்மெண்ட். அக்ரிகல்ச்சர் மற்றும் ஹார்ட்டிகல்ச்சர் படிப்புகள் தமிழ் வழியிலும் வழங்கப்படுகின்றன.

பி.டெக்., படிப்புகள்: புட் டெக்னாலஜி, பயோடெக்னாலஜி, எனர்ஜி அண்ட் என்விரான்மென்டல் இன்ஜினியரிங், அக்ரிகல்ச்சுரல் இன்பர்மேஷன் டெக்னாலஜி, பயோஇன்பர்மேடிக்ஸ், அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங்.

கல்வித்தகுதி:


12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். சில படிப்புகளுக்கு கணிதம் மற்றும் உயிரியல் பாடங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும் சில படிப்புகளில், தொழில்பிரிவு மற்றும் இதர அறிவியல் பாடப்பிரிவு படித்த மாணவர்களும் சேரலாம்.

4 முதன்மை பாடங்களில், பொதுப்பிரிவினர் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களும், பி.சி., மற்றும் பி.சி.எம்., பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், எம்.பி.சி., மற்றும் டி.என்.சி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.ஏ., மற்றும் எஸ்.டி., பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் போதும்.

மாணவர் சேர்க்கை முறை:

மாணவர்கள் 12ம் வகுப்பில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, கலந்தாய்வு வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: https://tnau.ucanapply.com/ எனும் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூன் 8

விபரங்களுக்கு:
www.tnau.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us