தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறந்த வேலை பெற 'ஸ்கில்செட்' அவசியம்

சிறந்த வேலை பெற 'ஸ்கில்செட்' அவசியம்

சிறந்த வேலை பெற 'ஸ்கில்செட்' அவசியம்


UPDATED : ஜூன் 10, 2026 01:47 PM

ADDED : ஜூன் 10, 2026 01:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2026 01:47 PM ADDED : ஜூன் 10, 2026 01:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமீபகாலமாக, ஏ.ஐ., மற்றும் தரவு அறிவியல் துறை மிகவும் பிரபலமாக உள்ளது. பிரபலமாக இருக்கும் காரணத்திற்காக மட்டும் ஒரு படிப்பை தேர்வு செய்வது உகந்ததல்ல. போட்டிகள் குறைந்த, வாய்ப்புகள் மிகுந்த படிப்புகள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும்.

போட்டி குறைந்த படிப்புகள்


டிபன்ஸ் மற்றும் ஸ்ட்ரேடடிஜிஸ் ஸ்டடீஸ், இன்டீரியர் டிசைன் மற்றும் டெக்கார், மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட் மற்றும் பொது நிர்வாகம் போன்ற சிறப்பு படிப்புகளில் குறைவான போட்டியும், சிறந்த வேலை வாய்ப்புகளும் உள்ளன. மாணவர்கள், ஆர்க்கிடெக்சர் படிப்பு அளவிற்கு 'இன்டீரியர் டிசைன்' படிப்பு குறித்து விழிப்புணர்வு பெறவில்லை.

கோவிட்-19க்குப் பிறகு உளவியல் படிப்பு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதோடு, அவற்றிற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. பி.எஸ்சி.,- கிரிமினாலஜி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் சயின்ஸ் படிப்பு, போலீஸ் வேலைகளுக்கு மட்டுமல்லாமல், தடயவியல் மற்றும் தனியார் துப்பறியும் வேலைகளுக்கும் உதவுகின்றன.

'ஸ்கில்செட்'


துறை சார்ந்த 'ஸ்கில்செட்' குறித்த விழிப்புணர்வு பெற்று, பட்டம்பெறுவதற்கு முன்பே அவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட் மாணவர்கள் 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' திறன்களை வளர்த்துக் கொள்வதாலும், விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் வீடியோ உருவாக்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதாலும் வேலை வாய்ப்புகள் எளிதாகும்.

மாணவர்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள படிப்புகளைத் தேர்ந்தெடுத்து, எல்லைகளை விரிவுபடுத்தி, பல்துறை மனப்பான்மையுடன் செயல்படுதல் வேண்டும். துறை சார்ந்த வல்லுநர்களிடம் 'நெட்வொர்க்கிங்' வளர்த்துக்கொள்வதும், உரிய வழிகாட்டுதலைப் பெறுவதும் முக்கியம்.

தங்கள் திட்டங்களையும், சிறு சிறு சாதனைகளையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும், தோல்விகளுக்கு அஞ்சாமல் போட்டிகளில் பங்கேற்கபதும் மிகவும் வரவேற்கத்தக்கது.

தொழில்துறையின் தேவைக்கும் அதிகமான ஏ.ஐ., இன்ஜினியர்கள் அதிகரித்தால், வேலை வாய்ப்பில் போட்டியும் கடுமையாகத் தானே இருக்கும். போட்டி குறைந்த படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்து படிப்பது சிறந்தது.

- டாக்டர் எம்.எம்.ரம்யா, டீன், ஏ.எம்., ஜெயின் கல்லூரி, சென்னை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us