விரைவில் 2,417 செவிலியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்; முதல்வர் ஸ்டாலின்
விரைவில் 2,417 செவிலியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்; முதல்வர் ஸ்டாலின்
UPDATED : செப் 23, 2025 12:00 AM
ADDED : செப் 23, 2025 05:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
விரைவில் 2,417 செவிலியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்து அதற்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார்.
அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் தேர்ச்சி பெற்று, மக்களுக்குச் சேவையாற்றவுள்ள 1,231 கிராம சுகாதாரச் செவிலியர்களுடன் எடுத்துள்ள புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பகிர்ந்து, 'மேலும் 2,417 காலிப் பணியிடங்களும் விரைவில் எம்ஆர்பி மூலம் நிரப்பப்படும்' என உறுதி அளித்துள்ளார்.