sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

21 பேருக்கு நல்லாசிரியர் விருது... அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை பட்டியல் வெளியீடு

/

21 பேருக்கு நல்லாசிரியர் விருது... அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை பட்டியல் வெளியீடு

21 பேருக்கு நல்லாசிரியர் விருது... அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை பட்டியல் வெளியீடு

21 பேருக்கு நல்லாசிரியர் விருது... அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை பட்டியல் வெளியீடு


UPDATED : செப் 03, 2025 12:00 AM

ADDED : செப் 03, 2025 10:01 AM

Google News

UPDATED : செப் 03, 2025 12:00 AM ADDED : செப் 03, 2025 10:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி :
புதுச்சேரி மாநிலத்தில் நல்லாசிரியர் விருது பெறும், 21 பேர் கொண்ட, பெயர் பட்டியலைபள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் கற்பித்தல் பணியின் சாதனைகளை பாராட்டி ஆண்டுதோறும் 4 பேருக்கு, ராதாகிருஷ்ணன் விருது, 7 பேருக்கு முதல்வரின் சிறப்பு விருது, 10 பேருக்கு கல்வி அமைச்சரின் வட்டார விருது ஆசிரியர் தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்தாண்டிற்கான நல்லாசிரியர் விருது பட்டியலை பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் விருது தட்டாஞ்சாவடி, அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் நித்யா, காரைக்கால், டி.ஆர்.பட்டினம் அரசு புது தொடக்கப் பள்ளி ஆசிரியர் அன்புசெல்வி. முத்திரையர்பாளையம், இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி விரிவுரையாளர் (இயற்பியல்) ஸ்ரீராம். கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (சமூகவியல்) ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முதல்வர் சிறப்பு விருது மொழி பிரிவில், புதுச்சேரி கல்வே கல்லுாரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) ஜஸ்டின் ஆரோக்கியதாஸ், வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி விரைவுரையாளர் (இயற்பியல்) பத்மாவதி, திருக்கனுார் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம்மாள். சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியர் வள்ளி, வி.தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் பாரதிரோஜா, காரைக்கால், வடமறைக்காடு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ரகமத்துன்னிசா.

கல்வி அமைச்சர் வட்டார விருது சுல்தான்பேட்டை கன்னியமிகு காயிதே மில்லத் அரசு மேல்நிலைப் பள்ளி கலைப்பரிவு ஆசிரியர் ஆனந்தராஜூ, முத்தியால்பேட்டை அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன், எல்லைப்பிள்ளைச்சாவடி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆர்த்தி, தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, பிள்ளைச்சாவடி வரதன் அரசு நடுநிலைப் பள்ளி பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) சுப்ரமணியன் (எ) சுரேஷ், வி.மணவெளி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராஜதிலகம், முதலியார்பேட்டை, அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி விரிவுரையாளர் (மனையியல்) தேவகுமாரி, காரைக்கால் வடமறைக்காடு காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளி பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பிரதாப், கோவில்பத்து தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் விஸ்வேஸ்வரமூர்த்தி, மாகி, பல்லுார், வி.என்.புருேஷாத்தமன் அரசு மேல்நிலைப் பள்ளி விரிவுரையாளர் (மலையாளம்) சினேகபிரபா, ஏனாம் ராஜிவ்காந்தி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கமடி பிரபாகர ராவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us