வி.ஏ.ஓ., பணியிடத்திற்கு போட்டித் தேர்வு 4 பிராந்தியங்களில் 19,128 பேர் பங்கேற்பு
வி.ஏ.ஓ., பணியிடத்திற்கு போட்டித் தேர்வு 4 பிராந்தியங்களில் 19,128 பேர் பங்கேற்பு
UPDATED : செப் 23, 2025 12:00 AM
ADDED : செப் 23, 2025 09:20 AM

புதுச்சேரி:
நான்கு பிராந்தியங்களில் நடந்த வி.ஏ.ஓ., தேர்வினை 19,128 பேர் எழுதினர்.
புதுச்சேரி அரசின் வருவாய் துறை 41 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு மொத்தம் 32,016 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் மதியம் 12:00 மணி வரை முதல் தாள் தேர்வு, மதியம் 2:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடந்தது.
இத்தேர்வு, புதுச்சேரியில் 68 மையங்கள், காரைக்கால்-10, மாகி-2, ஏனாம்-6 என, 86 மையங்களில் நடந்தது. முதல் தாள் தேர்வினை 19,128 பேர், இரண்டாம் தாள் தேர்வை 18,650 பேர் எழுதினர்.
போலீஸ் பாதுகாப்பு முன்னதாக தேர்வர்கள் காலை 8:00 மணி முதல் தேர்வு மையங்களில் அனு மதிக்கப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் மூலம் தேர்வர்கள் சோதனை செய்யப்பட்டனர்.
ஹால் டிக்கெட், அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்களின் வருகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டது. இன்டர்நெட் சேவையை முடக்க ஜாமர் கருவிகள் வைக்கப்பட்டு இருந்தன. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஆன்சர் கீ வெளியீடு புதுச்சேரியில் தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தலைமை செயலகம் கொண்டு செல்லப்பட்டன. பிற பிராந்தியங்களில் இருந்தும் விடைத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு ஆன்சர் கீ வெளியிடப்பட்டுள்ளது.
இன்று மதியம் 12:00 மணிக்குள் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.