திருவாரூர் மத்திய பல்கலையில் 11வது பட்டமளிப்பு விழா: பட்டங்களை வழங்கினார் குடியரசுத் தலைவர்
திருவாரூர் மத்திய பல்கலையில் 11வது பட்டமளிப்பு விழா: பட்டங்களை வழங்கினார் குடியரசுத் தலைவர்
UPDATED : செப் 03, 2025 12:00 AM
ADDED : செப் 03, 2025 06:14 PM

திருவாரூர்:
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
இவ்விழாவில் 3,000 மாணவர்களில் பெரும்பான்மையாக பெண்கள் இருப்பது, மேலும் தங்கப்பதக்கங்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான மாணவிகள் பெற்றிருப்பது சிறப்பம்சமாகும் என அவர் குறிப்பிட்டார்.
பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்திய குடியரசுத் தலைவர், கல்வி என்பது தனிநபர் வளர்ச்சியையும் சமூக முன்னேற்றத்தையும் இணைக்கும் பாலம் என கூறினார். மேலும், “கற்றல் வாழ்நாள் முழுவதும் தொடரும் பயணம். இது உங்களின் திறன்களை வளர்த்து, எதிர்காலத்துக்குத் தயார்படுத்தும். சமுதாயத்தின் புறக்கணிக்கப்பட்டோருக்கு அக்கறை காட்டுங்கள், சமூகப் பொறுப்பு உணர்வுடன் செயல்படுங்கள்” என்று அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் 14 ஆண்டுகளில் கல்வித் தரம், ஆராய்ச்சி, கிராமப்புற விரிவாக்கம் மற்றும் புறக்கணிக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்துள்ளதாகவும், தொழில்துறையுடன் இணைந்து அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தை சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.