ADDED : நவ 03, 2025 01:47 AM
புதுடில்லி: இரண்டு பைக்குகள் மோதி வாலிபர் உயிரிழந்தார்.
வடகிழக்கு டில்லி சோனியா விஹாரில், அக். 30ம் தேதி இரவு 10:00 மணிக்கு, அன்னபூரணி மந்திர் அருகே, இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில், பிரமோத் சர்மா 41, பலத்த காயம் அடைந்தார்.
அருகில் உள்ள மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் சர்மா ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதிய சிறிது நேரத்திலேயே, அடையாளம் தெரியாத வாகனம், சர்மா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் இருந்த சர்மா உடல், உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

