உலக பொருளாதார ஆய்வாளர்கள் இந்தியாவின் வளர்ச்சியை ஒப்புக்கொண்டனர்; அமித்ஷா பெருமிதம்
உலக பொருளாதார ஆய்வாளர்கள் இந்தியாவின் வளர்ச்சியை ஒப்புக்கொண்டனர்; அமித்ஷா பெருமிதம்
ADDED : செப் 25, 2025 08:34 PM

மும்பை: உலக பொருளாதார ஆய்வாளர்கள் இந்தியாவின் வளர்ச்சியை ஒப்புக்கொண்டனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: மேக் இன் இந்தியா 2.0 திட்டம், அடுத்த 25 ஆண்டுகளில் உலகப் பொருளாதா ரத்தில் பெரும் பங்கு வகிக்கும். வளர்ந்து வரும் துறைகளில் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். செயல்படாத சொத்துக்கள் தகவல்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளோம்.இந்தியாவின் வளர்ச்சியை உலகப் பொருளாதார ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஊழல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததால் வங்கித் துறையில் பிரதமர் மோடி சீர்திருத்தங்களைத் தொடங்கினார். ஏழை மக்களுக்கு வங்கிச் சேவையை வழங்க கடந்த 10 ஆண்டுகளில் 53 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் ஏழை மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்கும்.
வங்கிகளுக்காக மத்திய அரசு ரூ.3.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில் பல்வேறு சீர்திருத்தங்களை பிரதமர் மோடி கொண்டு வந்தார். ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் என்பது மோடியைத் தவிர வேறு எந்த பிரதமருக்கும் இதைப் பற்றி கனவு காணக் கூட தைரியம் இல்லை என்று நான் நிச்சயமாகச் சொல்ல முடியும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.