ADDED : செப் 21, 2025 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹைதராபாத்: மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயிலிருந்து, தெலுங்கானாவின் ஹைதராபாதுக்கு, விமானத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை கடத்தி வந்த பெண்ணை, வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
துபாயில் இருந்து ஹைதராபாதுக்கு விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு தகவல் கிடைத்தது. இதன்படி நேற்று, துபாயிலிருந்து வரும் பயணியரின் உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில், பெண் ஒருவரது உடைமையில், 12 கிலோ உயர் ரக கஞ்சா இருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பெண்ணை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு, 12 கோடி ரூபாய்.