தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பயங்கரவாத தொடர்பு உ.பி., நபர் கைது

 பயங்கரவாத தொடர்பு உ.பி., நபர் கைது

 பயங்கரவாத தொடர்பு உ.பி., நபர் கைது


ADDED : ஜூன் 02, 2026 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 02:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

லக்னோ: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உடன் இணைந்து, பயங்கரவாத குழுக்கள், நம் நாட்டின் டில்லி, மும்பை உட்பட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி, பாக்., பயங்கரவாத குழுவை வழிநடத்திய செஷாத் பாத்தி என்ற பயங்கரவாதி, சமூக வலைதளங்கள் மூலம் இந்திய இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இதன்படி அந்த இளைஞர்களை, 'ஸ்லீப்பர் செல்'களாக பயன்படுத்தி தாக்குதல்களை அரங்கேற்றவும் திட்டமிட்டது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அசம்கர் மாவட்டத்தில் உள்ள குஹதாதாபூர் பகுதியைச் சேர்ந்த முகமது ஷேக் என்பவர், பயங்கரவாதி செஷாத் பாத்தியுடன் தொடர்பில் இருந்ததை கண்டறிந்து மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us