உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 21, 2026 12:07 AM
அ நிறம் | அளவு
மதுரா: டில்லியில் இருந்து உ.பி., மாநிலம், ஆக்ராவுக்கு மதுரா தேசிய நெடுஞ்சாலை-யில் நேற்று கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அதிகாலை, 3:00 மணிக்கு டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி, தடுப்புச் சுவரில் மோதி, சாலை ஓரத்தில் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது.
இதில் டீக்கடைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த நான்கு பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இதில், சந்தோலி சத்தாவை சேர்ந்த லலித், 26, மற்றும் அடையாளம் தெரியாத மற்றொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த தேஜ்பால், 45, மற்றும் விகாஸ், 22, ஆகிய இரு வரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மதுரா போலீசார், டிரைவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
