கேள்வி கேட்டதால் 'சூடான' ராகுல்: உ.பி., 'திஷா' கூட்டத்தில் சலசலப்பு
கேள்வி கேட்டதால் 'சூடான' ராகுல்: உ.பி., 'திஷா' கூட்டத்தில் சலசலப்பு
ADDED : செப் 14, 2025 07:05 AM

ரேபரேலி: உத்தர பிரதேசத்தில் மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் குறித்த உயர்மட்ட சீராய்வு கூட்டத்தில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கும், மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே நிகழ்ந்த காரசார வாக்குவாதம் சமூக ஊடங்களில் வெளியாகி, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி உள்ளது.கண்காணிப்பு அம்மாநிலத்தின் ரேபரேலி தொகுதி எம்.பி.,யாக உள்ள லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில், 'திஷா' எனப்படும் மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டியின் கூட்டம் நடந்தது.
ரேபரேலி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் அமேதி தொகுதி எம்.பி.,யும், 'திஷா' அமைப்பின் துணைத் தலைவருமான கிஷோரி லால், மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மண்டல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில அமைச்சரான தினேஷ் பிரதாப் சிங், ராகுலை நோக்கி கேள்வி கேட்க ஆரம்பித்தார். இதனால் சூடான ராகுல், கூட்டத்திற்கு தான் தலைமையேற்றிருப்பதால், எதை பேசுவது என்றாலும், முன்கூட்டியே தன்னிடம் அனுமதி கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
சலசலப்பு இதனால், இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்தது. இது தொடர்பான வீடியோ, சமூக வலை தளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், 'திஷா' கூட்டத்தில் பங்கேற்பவர்கள், தலைவரிடம் அனுமதி கேட்ட பிறகே பேச வேண்டும் என்பது மரபு. அதை மீறி, மாநில அமைச்சர் பிரதாப் சிங் நடந்து கொண்டதாக, காங்கிரசைச் சேர்ந்த அமேதி எம்.பி.,யான கிஷோரி லால் குற்றஞ்சாட் டியுள்ளார்.