தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ புரட்சிகரமான முடிவு!

புரட்சிகரமான முடிவு!

புரட்சிகரமான முடிவு!


ADDED : ஏப் 13, 2026 12:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 12:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் மசோதாவை, லோக்சபாவில் கொண்டு வந்திருப்பது, மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசின் சிறப்பான மற்றும் புரட்சிகரமான முடிவு. இந்த மசோதா, நாடு முழுதும் உள்ள பெண்களுக்கு பரந்த அரசியல் பிரதிநிதித்துவத்தையும், நீதியையும் உறுதி செய்யும்.

ராம்தாஸ் அதவாலே மத்திய அமைச்சர், இந்திய குடியரசு கட்சி

தாஜா அரசியல்!

சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சரின் பூமியாக அறியப்படும் மேற்கு வங்கத்தில், ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு, ஆன்மிக சின்னங்களை அவமதிக்கிறது. தாஜா செய்யும் அரசியலை கைவிட்டு, அனைத்தையும் உள்ளடக்கிய ஆட்சியை ஏற்படுத்த பா.ஜ.,வுக்கு ஓட்டளியுங்கள்.

யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேச முதல்வர், பா.ஜ.,

அரசியலமைப்பை அழிக்கின்றனர்!


நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுவதை, ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., விரும்பவில்லை. அதனால் தான், அம்பேத்கர் உருவாக்கிய அரசியல்அமைப்பை முற்றிலும் அழிக்க அவர்கள் விரும்புகின்றனர். ஆனால், அரசியல்அமைப்பை பாதுகாப்பதும், வலுப்படுத்துவதும் நம் நோக்கம்.

ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us