/

செய்திகள்

/

இந்தியா

/

பிரசாந்த் கிஷோர் கட்சி தலைவராக பா.ஜ., முன்னாள் எம்.பி., நியமனம்!

/

பிரசாந்த் கிஷோர் கட்சி தலைவராக பா.ஜ., முன்னாள் எம்.பி., நியமனம்!

பிரசாந்த் கிஷோர் கட்சி தலைவராக பா.ஜ., முன்னாள் எம்.பி., நியமனம்!

பிரசாந்த் கிஷோர் கட்சி தலைவராக பா.ஜ., முன்னாள் எம்.பி., நியமனம்!


ADDED : மே 19, 2025 07:00 PM

Google News

ADDED : மே 19, 2025 07:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: ஜன் சுராஜ் கட்சியின் தேசிய தலைவராக பா.ஜ., மாஜி எம்.பி.,யை அக்கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் நியமித்துள்ளார்.

தேர்தல் வியூக நிபுணராக விளங்கிய பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற கட்சியை நிறுவியுள்ளார். விரைவில் பீகார் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதற்கு தமது கட்சியை அவர் தயார்படுத்தி வருகிறார். இந் நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் முதல் தேசிய தலைவராக பா.ஜ., மாஜி எம்.பி., உதய் சிங்கை நியமித்துள்ளார்.

இதுகுறித்து பாட்னாவில் நிருபர்களிடம் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:

கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்பட்ட மையக் குழு இந்த முடிவு எடுத்துள்ளது. தலைவராக உதய் சிங் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனம் பெரும்பான்மையின் ஓட்டுகளின் அடிப்படையில் மட்டுமல்ல, ஒருமித்த தேர்வின் அடிப்படையிலும் எடுக்கப்பட்டது.

இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.

ஜன் சுராஜ் கட்சியின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ள உதய் சிங்கின் செல்ல பெயர் பப்பு சிங். இவர் புர்னியா தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்.பி.,யானவர். 2019ம் ஆண்டு பா.ஜ.,வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது சுயேட்சையாக போட்டியிட்ட பப்பு யாதவுக்கு ஆதரவை தெரிவித்தவர்.