ADDED : ஜூன் 23, 2026 05:31 AM

கர்நாடகாவில், நேற்று முன்தினம் நடந்த, 'நீட்' மறு தேர்வை, பெங்களூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், பல மாணவர்களால் எழுத முடியவில்லை. இங்கு ஆளும் காங்கிரஸ் அரசு, மாணவர்களின் நலனை விட அரசியலுக்கே முன்னுரிமை அளிக்கிறது. இதுதொடர்பாக காங்., தலைவர் ராகுல், பதிலளிக்க வேண்டும்.
சுதன்ஷு திரிவேதி தேசிய செய்தித்தொடர்பாளர், பா.ஜ.,
சுகாதார அபாயம்!
'பி.எம்.ஸ்ரீ' திட்டத்திற்கு எதிராக பேரணி சென்ற போராட்டக்காரர்களை கலைக்க, போலீசார் அசுத்த நீரை பயன்படுத்தினர். தீவிர சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும். இத்தகைய நீரைப் பயன்படுத்த காரணம் என்ன? சாதாரண நீரையே பயன்படுத்தி இருக்கலாமே. இதை அரசு தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
பினராயி விஜயன் கேரள முன்னாள் முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி
முன்னேற வேண்டும்!
காஷ்மீரில் கூட்டு எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம், காஷ்மீரி பண்டிட்டுகள் கடந்த காலத்தின் பிடியில் இருந்து விடுபட்டு முன்னேற வேண்டும். இனி, எதிர்காலத்தை மட்டுமே அவர்கள் பார்க்க வேண்டும். இங்குள்ள சமூகங்களுக்கு இடையேயான பிணைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவது அவசியம்.
மெஹபூபா முப்தி தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி
